கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதையொட்டி அரசு, பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அந்தவகையில் கோயில்களில் திருவிழாக்கள் ரத்துசெய்யபட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில் பூஜைகள், வழிபாடுகள், அதில் பக்தர்கள் அனுமதி ஆகியவை குறித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கரோனா தொற்று தொடர்பாக அரசின் புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் வரும் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று வழக்கமாக நடக்கும் கனிக்கானும் நிகழ்ச்சிக்கு இந்த ஆண்டு சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் உள்ளிட்ட அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலைப் பொறுத்தவரை காலை 7 மணிக்கு மேல் அரசின் வழிகாட்டுதல்படி பக்தர்கள் தகுந்த இடைவெளியுடன் குறைந்த அளவிலான பக்தர்களை அனுமதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கரோனா: கனிக்கானும் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு - Sucindrum Temple festival at Covid restrictions
கன்னியாகுமரி: கரோனா தொற்று தொடர்பாக அரசின் புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் வரும் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று வழக்கமாக நடக்கும் கனிக்கானும் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
sucindrum-temple
இதையும் படிங்க: தேர்தலால் மட்டுமே கரோனா பரவியது - கிருஷ்ணசாமி