கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் என்ற மாணவர் படித்துவந்தார். இவர் தனது நண்பர்களுடன் நேற்று ஆரல்வாய்மொழியில் அருகே பொய்கை அணைக்குக் குளிக்கச் சென்றபோது அபிஷேக் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
'மாணவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்'- கல்லூரி மீது குற்றசாட்டு
கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக் என்ற மாணவன் நேற்று அணையில் மூழ்கிப் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாகக் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து சிவகங்கையிலிருந்து வந்த மாணவரின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அபிஷேக்கின் உறவினர்கள் அவர் உடலை வாங்க ஆரல்வாய்மொழிக்கு வந்தனர். அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் சார்பில் உரிய முறையில் விளக்கம் அளிக்காமலும் மாணவர் இறந்த சம்பவம் குறித்து உடனடியாக அவரது பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்காமலும் இருந்ததாக தெரிகிறது.
மேலும், அபிஷேக் இறந்து இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகியும் அவரது உடலைப் பார்க்கவும், காவல்நிலையத்திற்கும் கல்லூரி நிர்வாகம் சார்பில் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மாணவரின் உடலை வாங்க மறுத்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.