கன்னியாகுமரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் மாவட்டம் முழுவதும் 450க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரியில் மாநில அளவிலான தடகள போட்டிகள்! - district level
கன்னியாகுமரி: குமரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான மூன்று நாட்கள் நடைபெற்ற தடகள போட்டியில் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இப்போட்டியில் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ ஓட்ட பந்தயங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது
மூன்று நாட்கள் நடைபெற்ற தடகள போட்டியில் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில அளவிலான போட்டிகள் சென்னையிலும், தேசிய அளவிலான போட்டிகள் ஆந்திராவிலும் நடைபெற உள்ளதாகப் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.