சர்வதேச சுற்றுலாத் தளமான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம், சூரிய உதயம், உலக பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோயில் ஆகிய அனைத்தும் புகழ் பெற்றவையாகும். பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா பத்து நாட்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த விழாவிற்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகப்படியான மக்கள் குடும்பத்துடன் வந்து வழிபட்டுச் செல்வர். கன்னியாகுமரிக்கு வருகைதந்துள்ள இலங்கை பக்தர்கள் சிலர், பகல் 12 மணிக்கு அம்மன் கோயிலுக்குச் செல்லும் பகவதி அம்மன் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோருக்கு தயிரை வழங்கிவருகின்றனர். அது மட்டுமில்லாமல் சுற்றுலாப் பயணிகளுக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலின் சிறப்புகளைப் பற்றிய சிறப்பு கையேடுகளையும் இலவசமாக வழங்கினர்.