தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால் பெரும்பாலான அரசு பள்ளிகளை தற்போது தமிழக அரசு மூடி வரும் நிலையில்.
அரசுப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள்!!. - கன்னியாகுமரி
கன்னியாகுமரி: பறக்கை அரசு நடுநிலை பள்ளியில் ஆசிரியர்களின் சொந்தச்செலவில் ஸ்மார்ட் வகுப்பறை திறக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பறக்கை அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க் கையை அதிகரிக்க வேண்டி அப்பள்ளி ஆசிரியர்கள் வகுப்பறைகளை நவீன படுத்த முயற்சித்து தங்களின் சொந்த முயற்சியில் ஸ்மார்ட்போர்ட் மற்றும் புரோஜெக்ட்டர் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறையை நிறுவியுள்ளனர்.
இந்த வகுப்பறையை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திறந்துவைத்தார். நாள்தோறும் ஒரு வகுப்பு இந்த ஸ்மார்ட் வகுப்பறையில் நடைபெறும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு மாணவர்களின் பெற்றோர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.