கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்திற்கு அருகே கிழக்கு பஜாரில் வாடகை ஆட்டோ நிறுத்தம் காணப்படுகிறது. இங்கு 43 ஆட்டோக்கள் அண்ணா தொழிற்சங்கம் மூலம் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அஞ்சுகிராமம் தெற்கு பஜார் பகுதியில் தொ.மு.ச., தொழிற்சங்கத்தை சேர்ந்த 4 ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது அஞ்சுகிராமம் பஞ்சாயத்து திமுக வசம் உள்ளதால், பேருந்து நிலையம் அருகில் புதியதாக வாடகை ஆட்டோ நிறுத்தம் உருவாக்கி அங்கு 4 ஆட்டோக்கள் மட்டும் நிறுத்தப்பட்டு இயக்கபடுவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கிழக்கு பஜார் பகுதியில் உள்ள 43 ஆட்டோக்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதன் காரணமாக சவாரி எதுவும் இல்லாமல் கடன்பெற்று வாங்கிய ஆட்டோக்களுக்கு தவணை தொகையை செலுத்த முடியாமலும், தங்கள் குடும்பத்திற்கு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.