தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 25, 2020, 10:54 PM IST

ETV Bharat / state

செல்வமகள் சேமிப்புத் திட்டம்: 112 மாணவிகளுக்கு சேமிப்புக் கணக்கு தொடக்கம்!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த தினத்தையொட்டி பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ் 112 மாணவிகளுக்கு சேமிப்புக் கணக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

ஜெயலலிதாவின் 72 வது பிறந்த தினத்தையொட்டி பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம்
ஜெயலலிதாவின் 72 வது பிறந்த தினத்தையொட்டி பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ் சேமிப்புக் கணக்குப் புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

நாகர்கோவில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ் 112 மாணவிகளுக்கு சேமிப்புக் கணக்குப் புத்தகங்கள்

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 112 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ் பணம் வைப்புத் தொகையாக வைக்கப்பட்ட சேமிப்புக் கணக்குப் புத்தகங்களை வழங்கினார்.

இதையும் படிங்க:

சேமிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் வகையில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

ABOUT THE AUTHOR

...view details