தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் அசத்தல்! - students are participate

கன்னியாகுமரி: பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

exibition

By

Published : Oct 16, 2019, 3:53 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும், நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் அளவிலான அறிவியல் கண்காட்சி தனித்தனியாக நடத்தப்படுகிறது.

இதில் முதல் 10 இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு நான்கு கல்வி மாவட்டங்களை சேர்த்து அறிவியல் கண்காட்சி போட்டி நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

அதன்படி ஏற்கனவே 4 கல்வி மாவட்டங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவியரின் அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கண்காட்சியை கண்டுகளித்தனர்.

இதையும் படிங்க: ஈழம் குறித்து பேச வைகோவிற்கு மட்டுமே தகுதி உண்டு: சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details