தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரிக்கடலில் 'சவ்ஹாக் ஆப்ரேஷன்' ஒத்திகை - venkaiah naidu

கன்னியாகுமரி : துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி கடலோர பாதுகாப்பு படையின் சவ்ஹாக் ஆப்ரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

பாதுகாப்பு படையின் சவ்ஹாக் ஆப்ரேஷன் ஓத்திகை நிகழ்ச்சி

By

Published : May 22, 2019, 1:01 PM IST

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வருகையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டக் கடலோர பகுதிகளில் அந்நியர் ஊடுருவலை தடுக்கும் வகையில், சவ்ஹாக் ஆப்ரேஷன் என்ற ஒத்திகை நடைபெற்றது. இந்த ஆப்ரேஷன் மூலம் 48 கடலோர கிராம கடற்பகுதிகள் மற்றும் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் பின்புறமுள்ள கடற்பகுதிகளில் பாதுகாப்பு ரோந்து நடைபெற்றது.

கடலோர பாதுகாப்பு படையின் நான்கு அதிநவீன படகுகளில் மூன்று படகுகள் பழுதான நிலையில் ஒரு படகை வைத்து இந்த கண்காணிப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வின்போது கடலோர காவல் படை போலீசார் தொலைநோக்கிகள் மூலம் கண்காணித்து சந்தேகப்படும்படியான படகுகள் ஏதேனும் வந்தால் அவற்றை நிறுத்தி சோதனையிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details