தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமுத்திரகிரி ரத யாத்திரையை தொடங்கி வைத்த பொன்.ராதகிருஷ்ணன் - Puratasi month Durgashtami festival

கன்னியாகுமரியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் சமுத்திரகிரி ரத யாத்திரையை தொடங்கி வைத்தார்

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 1, 2022, 5:40 PM IST

கன்னியாகுமரி:கன்னியாகுமரி-கேரளா எல்லையில், மூவாயிரம் அடி உயரம் கொண்ட காளிமலையில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத துர்காஷ்டமி திருவிழா கொண்டாடப்படும். அந்த வகையில், இந்தாண்டிற்கான துர்க்காஷ்டமி திருவிழா நேற்று(செப்.30) தொடங்கியது.

கன்னியாகுமரியில் சமுத்திரகிரி ரத யாத்திரை

இந்த விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலிலிருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை இன்று(அக்.01) தொடங்கியது. இந்த யாத்திரையை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ எம் ஆர் காந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இந்த சமுத்திரகிரி ரத யாத்திரை கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், தக்கலை குலசேகரம் வழியாக வரும் (அக்.04) ஆம் தேதி காளிமலைக்கு சென்றடையும். இந்த ரத யாத்திரையில் இரு முடி கட்டிய ஏராளமான பெண் பக்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: படிப்பினை முடித்த மருத்துவர்களுக்கான பயிற்சியை உடனடியாக வழங்குக... ஓபிஎஸ்...

ABOUT THE AUTHOR

...view details