தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாமித்தோப்பு ரத வீதி சீரமைப்புப் பணிகள் தொடக்கம்!

கன்னியாகுமரி: சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி ரதவீதி சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

Samithoppu, samithoppu ayya vaikundasami main temple, ayya vaikundasami main temple renovation work, சாமிதோப்பு தலைமைப் பதி சீரமைப்புப் பணிகள் தொடக்கம், அய்யா வைகுண்டர்
சாமிதோப்பு தலைமைப் பதி சீரமைப்புப் பணிகள் தொடக்கம்

By

Published : Jan 19, 2020, 1:08 PM IST

சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை ஆகிய மூன்று மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா தேரோட்டம் ஜனவரி 27ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

தேரோடும் ரதவீதி குண்டும், குழியுமாக உள்ளதால் தேரோட்டம் நடக்கும் நேரங்களில் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள் சிரமமடைந்து வந்தனர். எனவே நான்கு ரத வீதியையும் மணல் நிரப்பி சீரமைக்க அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை முடிவு செய்தது.

தாய், குழந்தையைக் கண்டு தாவிச் சென்ற காளை - வைரல் வீடியோ!

இதனையடுத்து தற்போது நான்கு ரத வீதிகளில் காணப்படும் மணல், கற்களை ஜேசிபி இயந்திரம் மூலம் ஆழமாகத் தோண்டி, பின்னர் மணல் மூலம் சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பணிகளை அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிறுவனர் பூஜிதகுரு பாலஜனாதிபதி தொடங்கி வைத்தார்.

சாமித்தோப்பு தலைமைப்பதி ரத வீதி சீரமைப்புப் பணிகள் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details