தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

களைக்கட்டிய வைகாசி பெருந்திருவிழாவின் தேரோட்ட நிகழ்ச்சி!

கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி பெருந்திருவிழாவில் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தேரோட்ட நிகழ்ச்சி

By

Published : Jun 5, 2019, 12:07 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி பெருந்திருவிழா மே 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் 11ஆம் நாளான இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பகல் 11 மணிக்கு தலைமைப்பதி பள்ளியறையிலிருந்து அய்யா வைகுண்டசாமியை பல்லாக்கு வாகனத்தில் எழுந்தருளுச் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பகல் 12 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.

தேரோட்ட நிகழ்ச்சி

இதில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்கள், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details