தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் மாணவர்களுக்கு இலவச தற்காப்பு பயிற்சி! - Samithope

கன்னியாகுமரி: சாமிதோப்பு அன்பு வனத்தில் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச தற்காப்பு கலை பயிற்சி வகுப்பை திண்டிவனம் எம் எல் ஏ சீதாபதி சொக்கலிங்கம் துவக்கி வைத்தார்.

குமரியில் மாணவர்களுக்கு இலவச தற்காப்பு பயிற்சி!

By

Published : May 7, 2019, 6:37 PM IST

கன்னியாகுமரி சாமி தோப்பு, அன்பு வனத்தில் மாணவர்களுக்கு இலவசமாக தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்கான தொடக்க விழாவில் திண்டிவனம் எம்எல்ஏ சீதாபதி சொக்கலிங்கம், அய்யாவழி சமய தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்சியை துவக்கி வைத்து பேசிய திண்டிவனம் எம்எல்ஏ சீதாபதி சொக்கலிங்கம், " தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக பாடுபட்டவர் அய்யா வைகுண்டர். எனவேதான் அவர் வாரிசுகள் தொடர்ந்து தமிழ் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இங்கு தற்காப்புக்கலை பயிலவிறுக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

குமரியில் மாணவர்களுக்கு இலவச தற்காப்பு பயிற்சி

இப்பயிற்சி வகுப்புகள் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் வரை நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details