ரட்சணிய சேனை திருச்சபையின் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய தென் கிழக்கு மாகாணத்தின் பதினெட்டாவது மாகாண தளபதியாக கர்ணல் ஜாண் குமார் இன்று (நவம்பர் 8) பதவியேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து மாகாண பெண்கள் ஊழியர்களின் தலைவியாக அவரது துணைவியார் கர்னல் மணிக்குமாரி தாசரி பதவியேற்றுக் கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரட்சணிய சேனை பூத் டக்கர் நினைவு பேராலயத்தில் நடைபெற்ற விழாவில், பதவியேற்றுள்ள கர்னல் ஜான் குமார், ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் பிறந்து அங்கு கணக்கியல் விரிவுரையாளராக பணியாற்றிவந்தவர்.