தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை - ஒத்திகை

கன்னியாகுமரி: தமிழ்நாடு ,புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் "ஷாஹர் ஹவாச் ஆப்பரேஷன்" என்னும் பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

ஷாஹர் ஹவாச்

By

Published : Jul 19, 2019, 12:30 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 44 மீனவ கிராமங்களில் தொடர்ந்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினருக்கு சொந்தமான ஆறு சோதனைச்சாவடிகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு வாகனங்களை சோதனைக்குட்படுத்திய பின்னரே அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் "ஷாஹர் ஹவாச்" என்ற பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கி, இன்று மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்திய அரசின் கப்பல் படை, சட்டம் ஒழுங்கு காவல் துறை, கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறை, மீன்வளத் துறை இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டன.

ஷாஹர் ஹவாச்

இதில் மாவட்ட வாரியாக காவல் துறையினர் பயங்கரவாதிகள் வேடமிட்டு போலி துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் கடல் வழியாக ஊடுருவிச் செல்வர். இவர்களை கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறையினர், கப்பல் படையினர் சோதனையிட்டு சட்டம் ஒழுங்கு காவல் துறையினரிடம் ஒப்படைப்பார்கள்.

பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை ஆறு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இதனை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு செய்தார். அப்போது கன்னியாகுமரி காவல் துறை துணை காண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்ட காவல் துறையினர் உடனிருந்தனர்.


ABOUT THE AUTHOR

...view details