கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள், ஊதிய உயர்வு கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவந்தனர். ரப்பர் கழக அலுவலர்கள் முதல் அமைச்சர்கள் வரை 47 முறை பேச்சுவார்த்தை நடந்தும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை.
இதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்பது கோட்டங்களிலும் சுமார் 3000 தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் உயர்மட்ட அலுவலர்களுக்கும், நாகர்கோவில் கோட்டத்திலுள்ள தொழில் பேட்டை அலுவலகத்தில் நேற்று (பிப். 18) பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது.