கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்காக அம்மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
அதன்படி அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்டெல்லா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்பு பேரணி இந்த பேரணியை கன்னியாகுமரி சரக டிஎஸ்பி பாஸ்கரன் தொடங்கிவைத்தார். இதில் அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெஸ்ஸி மேனகா, பள்ளி ஆசிரியர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பள்ளியில் தொடங்கிய பேரணி அஞ்சுகிராமம் சந்திப்பில் உள்ள காவல் நிலையத்தில் முடிவுற்றது.
இதையும் படிங்க: புதிய மாடல் அறிமுகம்! வாடிக்கையாளர்கள் கடனுக்கு ஏற்பாடு செய்த கார் நிறுவனம்...!