தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுசீந்திரம் அருகே சாலையோரம் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு - சுசீந்திரம் அருகே சாலையோரம் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

சுசீந்திரம் அருகே சாலையோரம் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் மீட்பு
சடலம் மீட்பு

By

Published : Aug 7, 2022, 5:36 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரம் அருகே ஆஸ்ரமம் பகுதியில் சாலையோரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வேறு எங்காவது கொலை செய்து சடலத்தை இப்பகுதிக்கு கொண்டு வந்து மர்ம நபர்கள் எரித்துள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரனை செய்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:போக்குவரத்து பணிமனை மேலாளரை தாக்கிய பேருந்து ஓட்டுநர் கைது

ABOUT THE AUTHOR

...view details