தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரளத்துக்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி: கேரள மாநிலத்துக்கு கடத்த முயன்ற எட்டு டன் ரேஷன் அரிசி மூட்டையை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Ration rice seized in Kanyakumari
Ration rice seized in Kanyakumari

By

Published : Feb 8, 2020, 12:38 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு பல்வேறு வகைகளில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டுவருகிறது. அரசு பேருந்துகள், தனியார் சொகுசு கார்கள், ரயில்கள் மூலமாக ரேஷன் அரிசி கடத்தல் தொடர்கிறது.

இந்நிலையில் மீன் ஏற்றிச்செல்லும் கன்டெய்னர் லாரியில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் குமரி மாவட்ட வருவாய்த்துறை தனி தாசில்தார் சதானந்தர் தலைமையிலான அலுவலர்கள் குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியில் அந்த லாரியை தடுத்துநிறுத்தினர்.

அந்த லாரியை அலுவலர்கள் சோதனையிட்டபோது சாக்கு மூட்டைகளில் சுமார் எட்டு டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டுநர் ஜெகன் கைது செய்யப்பட்டார்.

8 டன் ரேஷன் அரிசை பறிமுதல் செய்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர்!

இதனைத் தொடர்ந்து ரேஷன் அரிசியுடன் வாகனத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள், அரிசியை காப்புக்காடு உணவு கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும், ஓட்டுநர் ஜெகனிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: #TNPCSScam - மூடி மறைக்கும் எடப்பாடி அரசு - வைரலாகும் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு!

ABOUT THE AUTHOR

...view details