கன்னியாகுமரி மாவட்டம் நேதாஜி காலனியை சேர்ந்தவர் சுவாமிநாதன் (54). இவர் தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ் மேனாக (கொடி அசைப்பவர்) பணியாற்றி வந்தார். சுவாமிநாதன், ஏற்கனவே சில நாட்களாக சரிவர பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று (டிச.17) அதிகாலை கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், சுவாமிநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த ரயில்வே போலீசார் சுவாமிநாதனின் உடலைக் கைப்பற்றினர்.