தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திய ஒற்றுமை, மூன்றாவது நாள் பயணத்தை  தொடங்கினார் ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் மூன்றாவது நாள் பயணத்தை நாகர்கோயிலில் இருந்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தொடங்கினார் .

ராகுல் காந்தியின் நாடு தழுவிய இந்திய ஒற்றுமை பாதை யாத்திரை
ராகுல் காந்தியின் நாடு தழுவிய இந்திய ஒற்றுமை பாதை யாத்திரை

By

Published : Sep 9, 2022, 9:26 AM IST

கன்னியாகுமரி:காங்கிரஸ் எம்பிராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை செப்.7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த நடைப்பயணம் 150 நாட்களில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கிலோ மீட்டர் தூரம் சென்று காஷ்மீரில் நிறைவு பெற உள்ளது. முதல்நாள் பயணத்தை ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து கொட்டாரம், சுசீந்திரம் வழியாக நாகர்கோவிலில் முடித்தார். அங்குள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்றிரவு தங்கினார். மூன்றாவது நாளாக இன்று (செப். 9) ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இருந்து மீண்டும் பயணத்தை தொடங்கினார். அவருக்கு ஏராளமான மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்திய ஒற்றுமை, மூன்றாவது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 56 கிலோ மீட்டர் நடைப்பயணத்தை நாளை நிறைவு செய்து, நாளை மறுநாள் கேரளாவில் பயணத்தை தொடங்க உள்ளார் ராகுல் காந்தி. இன்று நாகர்கோவிலிலிருந்து தொடங்கிய பயணம் சுங்கான்கடை, வில்லுககுறி, புலியூர்குறிச்சி, தக்கலை, அழகியமண்டபம் வழியாக சென்று மாலை முலகுமூட்டில் நிறைவு பெறுகிறது.

இதையும் படிங்க:ஒருவர் செயல்திறன் மிக்கவராக திகழ புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்

ABOUT THE AUTHOR

...view details