கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில், 2019ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சார்பாக பெருந்தலைவர் காமராஜருக்கு புதிதாக சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அப்போதைய மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை கடிதத்தை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ளார்.
சிலை அமைப்பதற்காக ஆரம்ப கட்ட பணிகளையும் அப்பகுதி மக்கள் மேற்கொண்டு முடித்துள்ளார்கள். தற்பொழுது காமராஜர் சிலை நிறுவப்படுவது மட்டுமே மீதியுள்ள நிலையில் உள்ளது.
இந்நிலையில், தற்போதுவரை தமிழ்நாடு அரசு இதற்கு முறையான அனுமதி வழங்கவில்லை என்றும், பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழித்து வருவதாக கூறி அப்பகுதி மக்கள், இறச்சகுளத்தில் புதிதாக காமராஜர் சிலை அமைய இருக்கும் சிலை பீடத்தை சுற்றி அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
அனுமதி மறுக்கப்பட்டால் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து - தேசிய பசுமை தீா்ப்பாயம் அமைத்த குழு ஆய்வு!