தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னோர்களுக்கு தர்ப்பணத்துக்கு தடை: வெறிச்சோடிய குமரிக் கடல் - கன்னியாகுமரி செய்திகள்

கன்னியாகுமரி: கரோனா பரவல் காரணமாக ஆடி அம்மாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறாததால் குமரிக் கடல் வெறிச்சோடி காணப்பட்டது.

பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய குமரி
பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய குமரி

By

Published : Jul 20, 2020, 3:07 PM IST

இந்து மதத்தினருக்கு முக்கியமான நாள்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. அவர்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து ஆடி அமாவாசை, தை அமாவசை ஆகிய இரு நாள்களிலும் ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குச் சென்று அரிசி, தர்ப்பைப்புல், எள், உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு தர்ப்பணம் செய்து புனித நீராடுவர்.

அந்த வகையில் இன்று (ஜூலை 20) ஆடி அமாவசையை என்றாலும், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நீர்நிலைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. அதன் அடிப்படையில் சரஸ்வதி தீர்த்தம், விநாயகர் தீர்த்தம், காயத்திரி தீர்த்தம் உள்ளிட்ட 16 வகை தீர்த்தங்களைக் கொண்ட கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பொதுமக்கள் யாரும் வராததால் கடற்கரை, திருவேணி சங்கமம், சங்கலித்துறை, 16 கால் மண்டபம் உள்ளிட்ட நீராடும் பகுதிகளில் மக்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோன்று மக்கள் அதிகமாக வந்து செல்லும் பகவதி அம்மன் கோயில், பூம்புகார் சுற்றுலாப் படகு மையமும் ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. தடை உத்தரவை மீறி பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிகளில் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவசை தினத்தில் மாவட்டம் மக்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதிலுமிருந்து லட்சக் கணக்கில் மக்கள் வந்து செல்லும் கன்னியாகுமரி வெறிச்சோடியது வரலாற்றில் இதுவே முதல் முறை.


ABOUT THE AUTHOR

...view details