தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவியிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேராசிரியர் கைது - முனைவர்

கன்னியாகுமரி: ஆயு்வுக் கட்டுரை சான்றிதழுகாக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

culprit

By

Published : Aug 5, 2019, 4:34 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரசல்ராஜ். இவர் மதுரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், ரசல்ராஜ் தனக்கு கீழ் முனைவர் ஆராய்ச்சி பயின்று வரும் மாணவி கிளாடிஸ் புளோரா என்பவரிடம் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பண சான்றுக்கு ரூ. 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதற்கு சம்பந்தம் தெரிவித்த கிளாடிஸ் பணத்தை மார்த்தாண்டம் பகுதியில் வைத்து இன்று தருவதாக ரசல்ராஜ்க்கு வாக்குறுதி அளித்ததோடு, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, மார்த்தாண்டத்தில் வைத்து லஞ்சம் வாங்கிய ரசல்ராஜை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேராசிரியர் கைது

ABOUT THE AUTHOR

...view details