தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அனைவருக்கும் வீடு திட்டம்'- நிதி வழங்காத புத்தளம் பேரூராட்சி முற்றுகை - புத்தளம் பேரூராட்சி

கன்னியாகுமரி: பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், நிதி அளிக்காத புத்தளம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

fund,issue,kanniyakumari

By

Published : Aug 20, 2019, 7:33 PM IST

Updated : Aug 20, 2019, 7:43 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதில் ரூ.3 கோடி ஆளும்கட்சி சார்ந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், மீதமுள்ள ரூ.5 கோடியை பயனாளிகளுக்கு வழங்காமல் பேரூராட்சி அலுவலர்கள் காலதாமதம் செய்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், கடன் வாங்கி இத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட தொடங்கிய பயனாளிகள், இன்னும் நிதி பெறாததால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

புத்தளம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

இதனால், நிதியை விரைந்து புத்தளம் பேரூராட்சி வழங்கவேண்டும் என பயனாளிகளும், திமுகவினரும் சேர்ந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக அங்கு ஏராளனமான காவல் துறையினர் குவிக்கப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated : Aug 20, 2019, 7:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details