அரபிக்கடலில் ஒரு வாரமாக பலத்த சூறைக்காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக ஒரு வாரத்துக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் கடற்கரை கிராமத்தில் கடல் நீர் உள்ளே புகுந்தது. அதனைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குளச்சலில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த துறைமுக பாலம் - கன்னியாகுமரி மாவட்டம்
கன்னியாகுமரி, இன்று(ஜூலை.10) காலை வீசிய சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றத்தால் குளச்சலில், கடல் மேல் கட்டப்பட்டிருந்த நடைபாலம் இடிந்து கடலில் விழுந்தது.
குளச்சலில் கடல்மேல் கட்டப்பட்டிருந்த நடை பாலம் இடிந்து கடலில் விழுந்து மூழ்கியது
இந்நிலையில் இன்று(ஜூலை.10) காலை வீசிய சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றத்தால் குளச்சலில், கடல் மேல் கட்டப்பட்டிருந்த நடைபாலம் இடிந்து கடலில் விழுந்தது. ராட்ச அலைகள் எழும்புவதால் பல கடற்கரை கிராமங்களுக்குள் கடல் நீர் புகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கடற்கரை கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:குமரி மாவட்ட ‘அத்திப்பட்டி’கள் - தொடரும் மக்களின் அவல நிலை!