தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரி மீனவர்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்காது -பொன். ராதாகிருஷ்ணன்!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் வர இருந்த சரக்குப் பெட்டக மாற்று முனையத்தை தூத்துக்குடியில் அமைப்பதற்கு மூவாயிரம்  கோடியில் பணிகள் தொடங்க பிரதமர் மோடி ஆணையிட்டுள்ளார். எனவே மீனவ சகோதரர்களின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்காது என்று பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குமரி மீனவர்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்காது -பொன். ராதாகிருஷ்ணன்!
குமரி மீனவர்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்காது -பொன். ராதாகிருஷ்ணன்!

By

Published : Mar 20, 2021, 5:29 PM IST

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்த வாகனத்தில் நின்றபடி இன்று (மார்ச் 20) பொழிக்கரை, கேசவன் புத்தன் துறை, புத்தன்துறை, பள்ளம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொண்டனர்.

அப்போது பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “திமுகவும், காங்கிரசும் திட்டமிட்டு உங்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். சரக்குப் பெட்டக முனையம் துறைமுகத்திற்கு தூத்துக்குடியில் பிரதமர் மோடி 3000 கோடி ரூபாயில் அதற்கான பணிகளைத் தொடங்குவதற்கு ஆணையிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது இப்போ இங்கே இதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? ஏனென்றால் இது அரசியல். இந்த தேர்தலில் அவர்கள் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். பொய் சொல்லியாவது வெற்றி பெற வேண்டும். அதற்காக இது போன்ற புரளியை கிளப்பி விட்டு வருகின்றனர்.

குமரி மீனவர்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்காது -பொன். ராதாகிருஷ்ணன்!

துறைமுகம் மட்டுமல்ல நான்கு வழி சாலை கொண்டுவரக் கூடாது என்றார்கள். இரட்டை ரயில் பாதை கொண்டுவரக் கூடாது என்றார்கள். அங்கெல்லாம் யாருக்கு என்ன பிரச்சினை ஒன்றும் கிடையாது. ஒவ்வொரு நலத்திட்டங்களும் வரும்போது, பொய்யான பரப்புரைகளை செய்து கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக மாவட்டமே அழிந்துவிடும் என்ற நிலைக்கு பரப்புரை செய்து வைத்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் - உச்ச நீதிமன்றம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details