தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கடவுளை கொச்சைப்படுத்துவது தான் ஸ்டாலினின் வேலை' - பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி: "கடவுளை கொச்சைப்படுத்துவதை மட்டுமே ஸ்டாலின் தனது விருப்பமாக கொண்டுள்ளார். இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

By

Published : Nov 3, 2020, 8:33 AM IST

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தின், பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

"வரும் நாடாளுமன்ற இடைத்தேர்தல், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் அதனை எதிர் கொள்ள பாஜக தயார். கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் மிகப்பெரிய நம்பிக்கையும், உற்சாகமும் இருப்பதை தற்போது பார்க்க முடிகின்றது. கடந்த ஐந்து மாதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் கூட்டம் நடத்தி பல்வேறு பணிகளை மேற்கொள்ளத்திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "கடவுளை கொச்சைப்படுத்துவதை மட்டுமே ஸ்டாலின் தனது விருப்பமாக கொண்டுள்ளார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அவர் சென்றபோது, கோயில் மரியாதை கொடுத்து சமய சின்னத்தை அணிவித்தார்கள். ஆனால், அவர் அதனை அழித்து அவமானப்படுத்தி விட்டார். இதேபோல் பசும்பொன் முத்துராமலிங்க தேவருடைய நினைவிடத்தில் வழங்கப்பட்ட திருநீற்றையும் ஏற்காமல் அவமதித்தார். இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

'ஸ்டாலின் பசும்பொன்னில் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்'

மேலும், "பாஜகவின் வேல் யாத்திரை நிகழ்ச்சி பலருக்கும் அச்சத்தை தருகிறது போலும். குறிப்பாக, யாருக்கெல்லம் மடியில் கனம் இருக்கிறதோ அவர்களே அச்சப்படுகின்றனர். யாத்திரை நிறைவு பெறும் போது பல்வேறு விஷயங்கள் தெளிவு பெறும்" என்றும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details