தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாமியார் வீட்டிற்கு தீவைத்த காவலர் - மருத்துவமனையில் மனைவி அனுமதி! - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரமடைந்த காவலர் ஒருவர், தன் மாமியார் வீட்டிற்கு தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமியார் வீட்டிற்கு தீவைத்த காவலர்
மாமியார் வீட்டிற்கு தீவைத்த காவலர்

By

Published : Jan 2, 2021, 5:16 PM IST

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்லின் ரிபா. இவருக்கும், குளைச்சல் பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆட்லினின் கணவர் நெல்லை மாவட்டத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ஆட்லின் ரிபா, கணவர் மற்றும் குழந்தைகளுடன் தனது தாய்வீட்டிற்கு சென்றார். அங்கு கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

அப்போது குழந்தைகள், தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியை பார்த்ததாக கூறப்படுகிறது. தந்தை இதனைக் கண்டித்தார். குழந்தைகள் அதைக் கேட்காமல் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்தனர். இதனால் ஆத்திரமடைந்த காவலர், தாங்கள் இருந்த மாமியார் வீட்டிற்கு தீவைத்து விட்டு தப்பிச் சென்றார்.

வேகமாக தீ பரவியதை அடுத்து, வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர். இதனைத் தொடர்ந்து, நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில், வீட்டிலிருந்த துணிகள், கட்டில் மற்றும் மின்சாதன பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும், வடசேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆட்லின் ரிபா, கணவன் தாக்கியதில் காயமடைந்ததாக கூறி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:தேனியில் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details