கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், குற்றச் சம்பவம் குறித்த சட்ட நடைமுறைகள், குற்றத் தடுப்பு வழிமுறைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு பள்ளி மாணவ - மாணவியர்கள் வரவழைக்கப்பட்டு முகாம்கள் நடைபெற்றுவருகின்றன.
காவல் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்!
கன்னியாகுமரி: தக்கலை காவல் நிலையத்தில் குற்றச் சம்பவங்கள் குறித்த சட்ட நடைமுறைகள், குற்றத் தடுப்பு வழிமுறைகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வு முகாமில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தக்கலை காவல் நிலையத்தில் டிஎஸ்பி ராமசந்திரன் தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் தக்கலை அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த பள்ளிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவலர்கள் குற்ற நிகழ்வுகள், அதற்கான சட்ட நடைமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகிறது, மாணவர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகாமல் தங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள், சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் கடைபிடிப்பது உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் காவல் நிலையத்தில் உள்ள அலுவலர்கள் அறை, கைதிகள் அறைகளை ஆகியவற்றைக் காண்பித்தும், குற்றச் சம்பவங்களின்போது துப்பாக்கிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்றும் மாணவர்களுக்கு விளக்கினர்.
இதையும் படிங்க: என்சிசி மாணவ,மாணவியர்களுக்குச் சுற்றுலா - வனத்துறை ஏற்பாடு!