நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம், அஞ்சுகிராமம், மணவாளக்குறிச்சி, இரணியல், பழவூர், கூடங்குளம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலைய பகுதிகளில் அதிகமான திருட்டு சம்பவங்கள் நடந்துவந்தன. இதனால் திருட்டு கும்பலை பிடிக்க கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு உதவி ஆய்வாளர் சாம்சன் தலைமையிலான போலீசார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது - 57 பவுன் நகை பறிமுதல்! - Police
கன்னியாகுமரி: பெண்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து 57 பவுன் நகைகள் கொள்ளை அடித்த பிரபல கொள்ளையனைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். விசாரணையில், அந்த நபர் கன்னியாகுமரி மாவட்டம் முட்டைகாடு புது காலனி பகுதியைச் சேர்ந்த கனகவேல் மகன் சிபு (29) என்பதும், இவர் தனியாகச் செல்லும் பெண்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து சங்கிலியைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இவர் மீது நெல்லை மாவட்டத்தில் நான்கும், கன்னியாகுமரியில் 13-ம் என 16 திருட்டு வழக்குகள், ஒரு திருட்டு முயற்சி வழக்கு என மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவரிடமிருந்து, 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள 57 முக்கால் பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது . இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் கூறும்போது, குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அதிதீவிரமாக வேலை பார்த்ததாகவும், அவர்களை மனமார வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.