சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் உள்பட ஏராளமான இளம் பெண்களிடம் சமூக வலைத்தளங்களில் பழகி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காசி என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
‘என்னை தேடி வந்த பெண்களுடன் ஜாலியாக இருந்தேன்’ - காசியின் வாக்குமூலம் - காவல் துறையினரிடம் காசி கொடுத்த வாக்குமூலம்
கன்னியாகுமரி: பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைதான காசியை விசாரித்த காவல் துறையினரிடம், தான் எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என்றும் தன்னைத் தேடி வந்தவர்களுடன் மட்டுமே ஜாலியாக இருப்பேன் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து காவல் துறையினர் அவரை முதற்கட்டமாக நீதிமன்ற உத்தரவுபடி மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காசி போதிய தகவல்களை தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. அவரின் கூட்டாளிகள் இரண்டு பேரின் பெயர்களை மட்டும் காசி தெரிவித்தார்.
இதையடுத்து நாகர்கோவிலைச் சேர்ந்த டைசன் ஜினோ என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவரின் மற்றொரு கூட்டாளி கவுதம் வெளிநாட்டில் உள்ளார் என்று தெரிகிறது. அவரைப் பிடிக்க விமான நிலையங்களுக்கு காவல் துறையினர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.