கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத் தலமாகவும், இங்குப் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலும் உள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மத பரப்புரை நோட்டீஸ் விநியோகம் செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. ஆனால் வழக்குப் பதிய போதிய முகாந்திரம் இல்லை என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை.
சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி கன்னியாகுமரி ரவுண்டானா அருகில் இந்து அமைப்பினர் திடீரென அனுமதி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு இருந்தனர். இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்த அந்த பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.