கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் மகள் கார்த்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு பேப்பர், பேனா வாங்குவதாக தாயிடம் கூறிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
செல்லும் வழியில் தன் காதலனை சந்தித்துள்ளார். இருவரும் தனியாக பேச வேண்டுமென ஆள்நடமாட்டம் இல்லாத சற்று இருட்டான பகுதிக்கு சென்றுள்ளனர். அதைக் கவனித்த ஆண்டிவிளையைச் சேர்ந்த அபிஷேக்(21) அவரது நண்பர் சகாய ஜீனு(22) ஆகிய இருவரும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, அப்பெண்ணை தென்னந்தோப்புக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தடுக்க முயன்ற அவரின் காதலனையும் தாக்கி அவரை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.