குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி 500 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. வீடுகளில் உள்ள இல்லத்தரசிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தனர்.
'ஆறாவது பூதமாக பிளாஸ்டிக் உலாவுது..!' - குமரியில் விழிப்புணர்வு பேரணி
கன்னியாகுமரி:பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி ஐம்பூதங்களை கொண்டு உலகம் உருவானது... ஆறாவது பூதமாக பிளாஸ்டிக் உலவுவதாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.
பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வு பரப்புரைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நாகர்கோவிலிலும் 500 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நாகர்கோவில் வெட்டூர்னிமடம் பகுதியிலிருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம், வடசேரி வரையுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஐம்பூதங்களைக் கொண்டு உலகம் உருவானது. ஆனால் ஆறாவது பூதமாக பிளாஸ்டிக் உலவுவதாக உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலத்தில் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.