தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: சி.ஐ.டி.யு ஆர்ப்பாட்டம் - பெட்ரோல் விலை உயர்வு

கன்னியாகுமரி: ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யு சார்பில் குமரி மாவட்டத்தில் 30 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : Jun 23, 2020, 6:47 PM IST

உலகம் முழுவதும் கரோனா தாக்குதலால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்தியாவில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர் ஊரடங்கு பிறப்பித்து வருகின்றன. இதனால் தொழில்களின்றி முடங்கி மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நேரத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இந்த விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சி.ஐ.டி.யு சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட தலைவர் ஸ்டீபன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details