கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 90 விழுக்காடு பாதிப்படைந்த நிலையிலுள்ள மாற்றுத்திறனாளி. இவருக்குச் சொந்தமான நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 1ஆம் தேதி ஒரு கும்பலுடன் விஜயனின் நிலத்திற்குள் புகுந்து அங்கிருந்த விஜயனின் மூதாதையரின் கல்லறைகளை இடித்து அகற்றியுள்ளார். இச்சம்பவம் குறித்து விஜயன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் இரு முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.