கன்னியாகுமரி: மனநலம் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறுபவர்களை வேலை வாங்கிக் கொடுமைப்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தோவாளை அருகேயுள்ள தனியார் கல்லூரியின் பின்புறம், அடர்ந்த வனப்பகுதிக்குள் அன்னை ஆசிரமம் எனும் பெயரில் மனநலம் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட மனநோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படிப்புதவி கோரிய ஒடிசா மாணவி- ஓடோடி உதவிய தர்மபுரி எம்பி!
இக்காப்பகத்தின் நிர்வாகி, பொது சாலையின் குறுக்கே 3 லாரி மணல்களைக் குவித்து வைத்துள்ளார். அதனை மனநலம் பாதித்தவர்களை வைத்து மனநல காப்பக வளாகத்திற்குள் இரக்கமில்லாமல் சுமக்க வைத்துள்ளார். தங்களால் சுமக்க இயலாத போதிலும், அதிக பாரத்தைச் சுமக்க வைத்து மனநோயாளிகளைத் துன்புறுத்திய தனியார் காப்பக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க சமூக செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வேலை வாங்கும் மனசாட்சியற்ற மறுவாழ்வு மையம் இதுகுறித்து படம்பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளர்களைக் கண்ணியமற்ற வார்த்தைகளால் திட்டியும், எல்லா செய்தி நிறுவனங்களையும் தனக்குத் தெரியும் என்ற தொனியிலும் பேசிய அந்த காப்பகத்தின் நிர்வாகி, இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்ற பொய்யை காப்பகத்தின் முன்பிருந்தே ஒரே போடாக போட்டுடைத்த சம்பவம் செய்தியாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.