கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன 16 மீனவர்களை தேடிக்கண்டுபிடிக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசுடன் பேசி வருவதாக தெரிவித்ததார்.
குமரி மாவட்டத்தில் படித்தவர்கள் அதிகம் இருப்பதால், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.