திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா ஆட்சி காலத்தில் தற்போதய குமரி மாவட்ட பகுதிகளை கைப்பற்ற டச்சு நாட்டு படைகள் கடல் மார்க்கமாக அதன் தளபதி டிலணாய் தலைமையில் குளச்சலை நோக்கி வந்தனர். திருவிதாங்கூர் மன்னர் படைகளிடம் அப்போது நவீன ரக பீரங்கிகள் ஏதும் இல்லை. ஆனால் டச்சு படைகளிடம் துப்பாகிகள் இருந்தன. இதனால் டச்சு படைகளை திருவிதாங்கூர் படைகளால் எதிர்கொள்ள முடியாத நிலை இருந்தது. மன்னரின் மதிநுட்பத்தால் போரில் வியூகம் அமைக்கபட்டது. அதன்படி ஏராளமான கட்டைவண்டிகளில் பனை மர தடிகளை வைத்து பீராங்கிகள் போல் குளச்சல் கடற்கரையில் அணிவகுத்து நிறுத்திவைத்தார்.
டச்சு படைகளை வென்றவர்களுக்கு மரியாதை - குளச்சல் போர்
கன்னியாகுமரி: குளச்சலில் நடைபெற்ற போரில் டச்சு படைகளை திருவிதாங்கூர் படைகள் வென்ற 279ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு இன்று குளச்சலில் உள்ள போர் வெற்றி ஸ்தூபிக்கு ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தி வீர வணக்கம் செலுத்தினர்.
கப்பலில் இருந்து பார்த்த டச்சு நாட்டு படைகள் பனைமர தடிகளை உண்மையான பிரங்கிகள் என நினைத்து திருவிதாங்கூர் மன்னரிடம் சரணடைந்தனர். 1741ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி திருவிதாங்கூர் மன்னர் படைகள் டச்சு படைகளை ராஜதந்திரத்தால் வென்றன.
இந்த சம்பவத்தின் 279ஆவது ஆண்டு வெற்றி தினம் இன்று குளச்சலில் போர் வெற்றி ஸ்தூபியில் உள்ள பூங்காவில் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மண்டலத்தில் உள்ள ராணுவ கமாண்டர் தலைமையில் ஏராளமான ராணுவ வீர்கள் ராணுவ அணிவகுப்பு நடத்தி மலர் வளையங்கள் வைத்து வீர வணக்கம் செலுத்தினர். இதில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே உள்பட ஏராளமான ராணுவ வீர்கள் கலந்துகொண்டனர்.