தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பொங்கல் முடிந்து திரும்ப போதிய பேருந்துகள் இல்லை’ - அவதியுற்ற பயணிகள்! - பொங்கல் விடுமுறை

குமரி: பொங்கல் விடுமுறை முடிந்து பணி இடங்களுக்கு செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Passengers suffer
Passengers suffer

By

Published : Jan 20, 2020, 11:55 AM IST

பொங்கலையொட்டி ஐந்து நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் தொடங்கியுள்ளது. இதனால் விடுமுறைக்காக வந்த மக்கள், நேற்று தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதில், ஏராளமான பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை, கோவை, பெங்களூரு, வேலூர் உள்ளிட்ட வெளியூர்களுக்குச் செல்ல நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் அதிகளவில் குவிந்திருந்தனர்.

ஆனால் பயணிகளின் கூட்டத்திற்கேற்ப பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்குள்ளாகினர். குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்குக் குறைந்த அளவிலான விரைவு பெருந்துகளே இயக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி

அதன் காரணமாக அனைத்து வகையான பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் நீண்ட தூர பயணிகள் இருக்கை கிடைக்காமல், நின்று செல்லும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதையும் படிங்க:தென்பெண்ணை ஆற்றங்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆற்றுத் திருவிழா!

ABOUT THE AUTHOR

...view details