தமிழ்நாட்டில் பிரசித்திப்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
பகவதி அம்மன் கோயில் வைகாசி பெருவிழா! - சுற்றுலாத்தலம்
கன்னியாகுமரி: பகவதி அம்மன் கோயிலின் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு அன்ன வாகனத்தில் அம்மன் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், இந்தாண்டு பகவதி அம்மன் கோயில் திருவிழா மே 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவில்தினந்தோறும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் மூன்றாம் நாள் திருவிழாவான நேற்று காலையில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, அன்னவாகனத்தில் தேவி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து சுப்பிரமணியசுவாமி கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து பவனி வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் முருக பக்தர்கள் நடத்தும் பஜனையும், பிரம்ம குமாரிகள் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஆகியோர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் பக்தர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.