தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் விடிய விடிய கனமழை! தென்னை மரம் விழுந்து ஒருவர் படுகாயம்!

கன்னியாகுமரி: விடிய விடிய பெய்த கனமழையால் அழகியபாண்டிபுரம் அருகே வீட்டின் மேற்கூரை மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனயைில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

HEAVY RAIN

By

Published : Jun 12, 2019, 12:19 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால், அழகியபாண்டிபுரம் அருகே பேயோடு கிராமத்தைச் சேர்ந்த மோசஸ் (65) என்பவர் வீட்டின் மேல் அதிகாலையில் தென்னை மரம் முறிந்து விழுந்தது.

இதில் துாங்கிக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளரின் காலில் முறிவு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், மரம் முறிந்து விழுந்ததில் வீட்டின் மேற்கூரை, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தேசமடைந்தன. தகவல் கொடுத்தும் சேதமடைந்த வீட்டை இதுவரை அரசு அலுவலர்கள் யாரும் பார்க்க வரவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மழையால் வீடுகள் தேசம்

ABOUT THE AUTHOR

...view details