கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 49 வயதுடைய தொழில் அதிபர் ஒருவர் கரோனா தொற்று ஏற்பட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருதுவமனையில் சிகச்சை பெற்று வந்தார். நோய் குணமாகி வீட்டுக்கு சென்ற மறுநாளே, அவருக்கு கண் வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, கண்ணில் இருந்து நீர் வடிய தொடங்கியது.
நோய்த் தொற்று அவர் உடல் முழுவதும் பரவிய நிலையில், நேற்று முன்தினம் (மே.28) அவர் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் கரோனா சிகிச்சை பெற்ற அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலையே, அவரை மீண்டும் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் அவருக்கு கறுப்பு பூஞ்சை நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.