கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே உள்ள றிங்கல்தெளபே மேல்நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமிற்கு பள்ளி தாளாளர் ஸ்டாலின் சாம் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை ரீட்டா மேரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் மோகனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
துப்புரவு பணி செய்து மரங்களை நட்ட என்.எஸ்.எஸ் மாணவிகள்! - trees for life
கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் அப்பகுதியில் துப்புரவு பணிகளை செய்து மரங்களை நட்டனர்.
என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் ஜாஸ்பர் ஏஞ்சலா முகாம் குறித்து விளக்க உரையாற்றினார். முகாமின் ஐந்தாம் நாளான நேற்று, என்எஸ்எஸ் மாணவிகள் பள்ளி வளாகத்திலிருந்து பேரணியாக ஒசரவிளை பகுதிக்கு வந்து, அங்கு களப்பணியில் ஈடுபட்டனர். பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள் ‘தண்ணீரைச் சேமிப்போம், நெகிழியை ஒழிப்போம்’ என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் பிடித்தபடி பேரணியாக வந்தனர்.
பின்னர், ஒசரவிளை பகுதிகளைச் சுத்தம் செய்து, அந்தப் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டனர். ஒசரவிளை பகுதியைச் சுத்தம் செய்து மரங்களை நட்ட மாணவிகளை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.