தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் படகு சேவை ரத்து: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

நாகர்கோவில்: படகு சேவை ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

கன்னியாகுமரி

By

Published : May 20, 2019, 1:52 PM IST

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயில், முக்கடல் சங்கமம், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை போன்றவற்றை படகில் சென்று பார்வையிட தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துவருவது வழக்கம். மேலும், தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இந்நிலையில், இன்று காலை கடலின் நீர் மட்டம் குறைந்து காணப்பட்டதால் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. அதிகாலையிலேயே சூரிய உதயத்தைப் பார்த்துவிட்டு படகு சேவைக்கு பயணச்சீட்டு வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் படகு சேவை ரத்து செய்ததையடுத்து பெரும் சோகத்தில் மூழ்கினர்.

இது குறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம், கடல் நீர் மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது படகு சேவை தொடங்கப்படும். அதுவரை படகு சேவை நிறுத்திவைக்கப்படும் எனக் கூறியது.

ABOUT THE AUTHOR

...view details