கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மூவேந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஷீபா என்ற பெண்ணிற்கும் இன்று திருமணம் நடைபெற்றது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமண தேதி குறிக்கப்பட்டு உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தேர்தல் தேதியும் திருமண தேதியும் ஒரே நாளில் வந்ததால் தனது வாக்கை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற மனகவலையில் இருந்த மணமகன் சிவா இது குறித்து மணப்பெண்ணிடம் தெரிவித்தார்.
குமரியில் திருமணம் முடிந்த கையோடு வாக்களித்த புதுமணத் தம்பதி! - nagarcovil
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் திருமணம் முடிந்த கையோடு ஜோடியாக வாக்குச்சாவடிக்கு வந்த புதுமண தம்பதி தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
newly-married-couple-vote-
திருமணம் முடிந்ததும் முதல் வேலையாக வாக்குச்சாவடி சென்று வாக்களித்துவிடலாம் என மணமகள் கூறியதைத் தொடர்ந்து, திருமணம் முடிந்து உற்றார் உறவினர்களை வழியனுப்பி வைத்த புதுமண தம்பதிகள் சிவா மற்றும் ஷீபா ஆகியோர் நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மணகோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து சென்ற மணமக்களை வாக்குச்சாவடியில் கூடி இருந்த ஏராளமான வாக்காளர்களும் வாழ்த்தினர்.