கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத் துறை தலைவராக இருந்த டாக்டர் பாலாஜி நாதன் பொறுப்பேற்றுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் பாலாஜி நாதன் கூறும்போது, ‘ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு நவீன சிகிச்சை பிரிவுகள் இங்கு இயங்கி வருகின்றன. பல அறுவைசிகிச்சைகளை சிறந்த முறையில் மருத்துவர்கள் கையாளுகின்றனர்.