கன்னியாகுமரி மாவட்ட தேன் சேகரிப்போர் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தேன் சேகரிப்போர் சங்கத் தலைவர் ஜூடஸ் குமார் தலைமை தாங்கினார்.
'வெளிமாநிலங்களில் சென்று தங்கி, தேன் சேகரிக்க அனுமதிக்க வேண்டும்' - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
குமரி: கேரளா, கர்நாடகா மாநிலங்களில் சென்று தங்கி, தேன் சேகரிக்கும் தொழில் செய்ய அனுமதி பெற்றுத் தரக்கோரி, குமரி மாவட்ட தேன் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேன்
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கேரளா, கர்நாடக மாநிலங்களில் தேன் சேகரிக்க அந்தந்த பகுதிகளுக்குச் சென்று தங்கி, தொழில் செய்ய அனுமதி பெற்றுத்தர வேண்டும் எனவும்;
கர்நாடகாவில் சேகரித்த தேனைக் கொண்டு வர அனுமதி பெற்றுத்தர வேண்டும் எனவும்; குமரி மாவட்டத்தில் விவசாயிகளின் தேன் அனைத்தையும் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்யவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.