கன்னியாகுமரி:கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் இருந்து வெளியே வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரண விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்; தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு இதனைக் கட்டுப்படுத்த முன் வர வேண்டும் என நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இன்று (ஜன.22) நடந்த 'ஸ்ரீமத் பகவத் கீதை' புத்தகம் வெளியீட்டு விழாவில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, இந்து மகாசபை அகில இந்திய தலைவர் தா.பால சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, 'கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்திலிருந்து அவசரம் அவசரமாக வெளியேறிய சுபஸ்ரீ என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.